அவதூறு வழக்குக்காக அரசுப் பணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரயம் செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர்சுப்ரமணிய சாமி.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமிக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததோடு உரிய முகாந்திரம் இல்லாமல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தன் மீதான 6 அவதூறு வழக்குகளுக்காக கொஞ்சம் கூட சிந்திக்காமல் அரசுப் பணத்தை தண்ணீரை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செலவிட்டுள்ளதாக சாடியுள்ளார்.
முதலமைச்சர் மீதான சுப்ரமணியசாமியின் இந்த திடீர் பாய்ச்சலுக்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததே காரணமாகும்.
சுப்ரமணியசாமியை பொறுத்தவரை ஆரம்பம் முதலே சசிகலா ஆதரவு நிலைப்பாடு உடையவர் என்பது அனைவரும் அறிந்த விவகாரம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சசிகலா விடுதலையும் நடக்க உள்ளதால் மீண்டும் தமிழகத்தின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி.