சீரற்ற ரத்த அழுத்தம்: ரஜினிகாந்த் அப்பல்லோவில் அனுமதி

 


மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். 

அண்ணாத்த படப்பிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார்.படப்பிடிப்பின்போது பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது.

இதனையடுத்து, ரஜினிகாந்துக்கு 22ஆம் தேதி மேற் கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், அவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்” என்று கூறப்பட்டது.

மேலும், “ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதுவுமில்லை. ரத்த அழுத்தத்தில் கடுமையான ஏற்ற இறக்கம் இருந்ததன் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இரத்த அழுத்தப் பிரச்சினை தீரும் வரை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு, அதன்பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர அவருக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை” எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். 

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் நலம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். 

ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்விப்பட்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

ஆந்திர நடிகர் பவன் கல்யாணும் ரஜினியின் உடல் நிலை தொடர்பாக அங்குள்ள மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை விசாரித்ததாக தெரிவித்துள்ளார். ரஜினி விரைவில் உடல் நலன் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.