சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன்! விளம்பரம் கொடுத்த இளைஞர்!

 90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன் பட்டிருக்கிறேன். 

சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காஷ்மீர் குல்கத்தை சேர்ந்தவர் சப்ஸர் அகமது கான்(28). இவர் குல்கம் மாவட்டத்தின் காசிகுண்டில் உள்ள நுசு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு கார் டீலராக பணிபுரிந்து வருகிறார். தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை ஸ்ரீநகரைச் சேர்ந்த காஷ்மீர் ரீடர் செய்தித்தாளில் வெளியிட்டார்.

அந்த விளம்பரத்தில், நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன். ஏனெனில் நான் வியாபாரத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஆனால், 90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன்பட்டிருக்கிறேன். சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்திருந்தார்.

இவர் வங்கிக்கு ரூ .61 லட்சமும், மக்களுக்கு ரூ .30 லட்சமும் கடன்பட்டுள்ளதாக கூறினார். இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட பின்னர், கிட்னி வாங்குபவர்களிடமிருந்து சில அழைப்புகள் வந்ததாக கான் தெரிவித்துள்ளார்.