சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில்

 


மெட்ரோ ரயில் வழித்தடத்தில் புதிய மைல்கல்லாக திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான பணி முடிந்து, டீசல் இன்ஜின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்தகட்ட  மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முடிந்தபின், பயணிகள் பயன்பாட்டுக்கு ஜனவரி இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி, கொருக்குப் பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர்,விம்கோ நகர்  பகுதியில் ரயில் நிலையங்கள் (வண்ணாரப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 8 மெட்ரோ நிலையங்களுடன் 2 நிலத்தடி மற்றும் 6 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் மற்றும் திருவொற்றியூர் /   விம்கோ நகர் மெட்ரோ நிலையம் இடையே சோதனை ஓட்டத்தை  மெட்ரோ ரயில் நிர்வாகம் 26.12.2020 நடத்தியது. 

சோதனை ஓட்டத்தின்போது, டீசல் லோகோமோடிவ் வாகனம் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. சோதனையின் போது மொத்தம் 9.05 கி.மீ. அப்லைன் மற்றும் டவுன்லைன் இரண்டிலும் இயக்கவும் வண்ணாரப் பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரையிலான முழு கட்ட முதல் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டன.