ஒரே டோஸில் கொரோனாவை விரட்டும் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு

 பெல்ஜியத்தின் கே.யூ.லுவனில் உள்ள ரெகா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. கொரோனாவை தடுக்க உலகம் முழுக்க சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் சில தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையிலும் வெற்றிபெற்றுள்ளன.

பொதுவாக கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் பலவும் இரட்டை ‘டோஸ்’ கொண்ட தடுப்பூசிகள் ஆகும். 

அதாவது தடுப்பூசியை ஒரு முறை போட்டு பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் போட வேண்டும். 

இதனால் ஒருவர் 2 முறை தடுப்பூசி போட நேரிடும். இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டில் உள்ள கே.யூ.லுவனில் உள்ள ரெகா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியை கண்டறிந்துள்ளனர்.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு ரெகாவேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் மேற்பரப்பில் உள்ள ஸ்பைக் புரோட்டின் மரபணு வரிசையை மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசியில் செலுத்தி, இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த தடுப்பூசியானது வெள்ளெலிகளின் நுரையீரலில் தொற்றுநோயையும் உருவாக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

குரங்குகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, அவை போடப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குவதை நாங்கள் கவனித்தோம். 

பதினான்கு நாட்களுக்குப் பிறகு, அனைத்து விலங்குகளிலும் நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் உயர் நிலைகளில் அளவிடப்பட்டன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.