நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே ஆஸ்ரம் பள்ளியை வாடகை கட்டிடத்தில் நடத்தி வருகிறார். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் வெங்கடேஷ்வரலு, பூர்ண சந்திரராவ் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்விவகாரத்தில், 11 கோடியை உடனே தர முடியாததால், இப்போது 2 கோடியை கொடுத்துவிட்டு மாதம் 10 லட்சம் தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் வெங்கடேஷ்வரலு கையெழுத்து போட்ட நிலையில் லதா ரஜினிகாந்த் கையெழுத்து போடாமலும், பணத்தை தராமலும் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாம, ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின் காலி செய்யாவிட்டால்ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்தது.
லதா ரஜினிகாந்த் மீது உயர் நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படவில்லை. எங்கள் நிறுவனம் மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் பொய் செய்திகள் பரவுகின்றன. பள்ளிக்கு வேறு இடத்தை தேடி வருகிறோம். உயர்நீதிமன்றத்துக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப நடந்துகொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.