100 ரூபாய் உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது - திருமாவளவன்

 
 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 உயர்ந்துள்ள நிலையில், உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 01-ஆம் தேதி வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.610 லிருந்து ரூ.660 ஆகவே உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.660 லிருந்து ரூ.710 ஆகவே உயர்ந்துள்ளது. 

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை சுரண்டும் இந்த விலை உயர்வை மோடி அரசு உடனே திரும்பப்பெற்று பழைய விலைக்கே கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.