ஹஜ் பயணம் மேற்கொள்ள- கொரோனா சான்றிதழ்


 

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று தெரிப்பிக்கப்பட்டுள்ளது.


ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் 2021 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவுக்குச் செல்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று தெரிவித்தார்.


இது குறித்து, ஹஜ் குழு மற்றும் பிற குழுவிடம் ஒரு ஆலோசனை நடத்திய பின்னர், மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அடுத்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி என்று கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், "விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.


கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அனைத்து யாத்ரீகர்களும் தங்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தை அறிவித்துள்ளோம்.


அதே நேரத்தில், சவூதி அரேபியாவுக்கு விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் நெகட்டிவ் சோதனை இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.