அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் சீனா

 அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை சீனா ஏற்க மறுப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.


உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார்.


அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதனைதொடர்ந்து ஜோ பைடனின் ஆதரவாளர்கள், கொண்டாடி வருகின்றனர். மேலும், பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு உலகளவில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் வாங் வென்பின், ஜோ பைடனின் வெற்றியை சீனா ஏற்க மறுப்பதாக தெரிவித்தார்.


இதுதொடர்பாக பேசிய அவர், அமெரிக்க தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் சட்டங்களை பொறுத்தே வெளியாகும் நினைப்பதாகவும், அவரது வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.


அதுமட்டுமின்றி, இருநாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை நீக்கி, நல்லுறவை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்த அவர், சீனாவின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான கொள்கைகளை யாராலும் அசைக்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்