22.11.2020 சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.
இதில் டி ராஜேந்திரன் அவர்களை வீழ்த்தி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் சென்னையிலுள்ள அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வந்தது.
ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர் அவர்களும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அவர்களும், பி எல் தேனப்பன் அவர்களும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் 23.11.2020 1,303 பேர் ஓட்டு போட தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
அதில் 1050 பேர் மட்டுமே வாக்களித்தனர். இந்நிலையில் தற்போது இந்த தேர்தல் குறித்த முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த தேர்தலில் தமிழ் திரைப்பட சங்க தலைவராக டி ராஜேந்திரன் அவர்களை வீழ்த்தி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
டி ராஜேந்திரன் அவர்கள் 337 வாக்குகள் பெற்றுள்ளார், 557 வாக்குகள் பெற்று முரளி வெற்றி பெற்றுள்ளார்