பாஜகவின் வேல் யாத்திரை-நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ்


தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதால், பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் இரண்டாவது நாளாக இன்று வேல் யாத்திரை நடத்தப்பட்டது.


அதன் படி சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வேல்யாத்திரையை தொடரவிருந்த நிலையில், எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அண்ணாமலை உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரை போலீசார், கைது செய்தனர்.


பாஜக சார்பில் நடைபெற்ற வேல்யாத்திரையால் வட சென்னை பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


இதுமட்டுமின்றி, வாகன நெரிசலில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.