நடிகர் அமிதாப் பச்சன் மீது வழக்குப்பதிவு

 அமிதாப் பச்சன் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நடிகர் அமிதாப் பட்சன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வருகின்ற பனோகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனூப் சோனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.


அப்போது அவர்களிடம் அம்பேத்கர் அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர் போன்ற பல கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் அமித்பா மனுஸ்மிருதி நூல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அவரின் இந்த பேச்சு மதஉணர்வை புண்படுத்தியதாக உத்திரபிரதேசத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் லக்னோ காவல்துறை நடிகர் அமிதாப் பட்சன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.