1) வாணலியில் வறுப்பதற்காக, முட்டையை உடைத்து ஊற்றும்போது, முட்டை அங்கும் இங்கும் சிதறி விடுகிறது. இதைத் தவிர்க்க, வாணலியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றிப் பரப்பிய பிறகு, முட்டையை உடைத்து ஊற்றினால், முட்டை ஒன்றி இருக்கும்.
2)ஆற்று மீனின் சேற்று வாடை போக வேண்டும் என்றால் மீனை உப்புப் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
3)காபி மேக்கரில் சீரகத்தைப் போட்டு, வெந்நீரை ஊற்றுங்கள். சில நிமிடங்களில் அருமையான சீரகத் தண்ணீர் தயார்! சீரகத்தை வடிகட்ட வேண்டியதும் இல்லை. வயிற்றுப் பிரச்சனைக்கும் பலன் கொடுக்கும்.
4)ஹெல்த்தியான சப்பாத்தி செய்ய, கோதுமை மாவுடன், நான்கில் ஒரு பங்கு சத்து மாவு, ஒரு டீஸ்பு ன் வெந்தயப்பொடி கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது வெந்தயக்கீரையை வதக்கியும் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது இந்த சப்பாத்தி.
5)சமைப்பதற்கு முன் உலர்த்திய மீனை நன்றாக கழுவி சில மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்கவும்.
6)பிரெட்டை ஸ்வீட் அயிட்டமாக மாற்ற ஒரு ஐடியா. ஒரு டம்ளர் பாலில் மூன்று (அ) நான்கு டீஸ்பு ன் மைதா, சர்க்கரை, சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட்டை நனைத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பிரெட் மொறுமொறுப்புடன் சுவையாகவும் இருக்கும்.
7)எலுமிச்சைப் பழச்சாற்றை ஊற்றி கை மற்றும் கத்தியைக் கழுவினால் நாற்றம் போய்விடும்.
8) கடினமான வேகாத கறியை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ஊற வைத்தால் மிருதுவாகிவிடும்.
9) முட்டை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, எலுமிச்சை பழச்சாறு கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
10)மிளகாய் வற்றலை நீங்கள் வறுக்கும் பொழுது ஒருவிதமான நெடி அறை முழுவதும் பரவி இருக்கும். இதனால் இருமல், எரிச்சல் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மிளகாய் வற்றலில் இருக்கும் காம்புகளை நீக்கி விட்டு பின்பு வறுத்தால் நெடி அடிக்காமல் கமறாமல் இருக்கும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா