கொரோனா தடுப்பு மருந்து - வெற்றி

 கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் 90% வெற்றி.  


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் 90% வெற்றியை பெற்றுள்ளதாக pfizer நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


இந்த ஆய்வை, ஃபிஃசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, 6 நாடுகளில் 43,500 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களில் இதுவரை யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.