திருவண்ணாமலை: மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கிரிவலம் வரும் போது தரிசிக்க வேண்டிய கோவில்கள் உள்ளன.
திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் பகுதிகளில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆதி அண்ணாமலை கோவில்.
திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் பகுதிகளில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆதி அண்ணாமலை கோவில்.
ஆதி அருணாசலம் அபிதகுஜாம்பாள் கோவில்
அருணாச்சலேஷ்வரா கோவில் கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கக்கூடும். எனவே, இது 2000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
அருணாச்சலேஷ்வரா கோவில் கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கக்கூடும். எனவே, இது 2000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
பல்வேறு தேவர்கள் மற்றும் தேவியரின் சிலைகளை கொண்ட மர கட்டிடமாக இக்கோவில் இருந்திருக்கும் என்று நம்பப்படுகின்றது.
பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோவிலுக்கு முன்னரே அண்ணாமலையாருக்கு எழுப்பப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பாதையில் இருந்து ஏழு கி.மீல் உள்ள அடி அண்ணாமலை என்ற ஊரில் உள்ளது
இத்தலத்தின் மூலவர் ஆதி அண்ணாமலையார் என்றும், அம்பாள் ஆதி அபிதகுசலாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்
திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுகப் பெருமான் மற்றும் எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலில் அங்க மண்டபம் உள்ளது. அத்துடன் உண்ணாமலை எனும் தீர்த்தமும் அமைந்துள்ளது
இத்தலத்திலிருந்து அருணாசலேஸ்வரரை பார்ப்பதை சிவயோக முக தர்ஷன் என்று அழைக்கின்றனர்.
திருமூலர் இந்த தலத்திருந்து அவ்வாறு தரிசித்துள்ளாக கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் திருவெம்பாவை இத்தலத்தில் இயற்றியுள்ளார்.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவெம்பாவை பதிகங்களையும் இயற்றி உள்ளார்.
கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.
இத்தலத்தை அணி அண்ணாமலை என்றும் அழைப்பர். பிரம்மன் தனது மகனான சனகாதி முனிவரிடம், வேறு எங்கும் களையப்படாத பாவங்கள் இத் தல அணி அண்ணாமலலயாரைத் தொழ அகலும் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலை செல்பவர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் ஆதி அண்ணாமலையார் கோவிலாகும்.
இக்கோயில் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்துள்து. [இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. இச்சிவாலயம் அண்ணாமலையார் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலை அடி அண்ணாமலையார் கோயில் என்றும் அழைப்பர்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்