வணிக எரிவாயு உருளையின் விலை அதிகரிப்பு.


 





வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு உருளைகளின் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு உருளை விலையை மாதந்தோறும் முதல் தேதி மாற்றி அமைத்து வருகின்றன.


அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


எனவே, சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை நவம்பர் மாதத்துக்கும் ரூ.610 ஆகவே நீடிக்கிறது.


இதேபோல், டெல்லி, மும்பையில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும் நீடிக்கிறது.


ஆனால், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு  விலை, சிலிண்டருக்கு ரூ.78 உயர்த்தப்பட்டுள்ளது.


இதன் சென்னை விலை ரூ.1,354 ஆகவும், டெல்லியில் ரூ.1,241.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,296 ஆகவும், மும்பையில் ரூ.1,189.50 ஆகவும் அதிகரித்துள்ளது.


இந்த விலையேற்றத்தின் தாக்கம் நுகர்வோரையும் பாதிக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.