கோவிந்தராஜ பெருமாள் சயன கோல தத்துவம்-திருமோகூர் - பிரார்த்தனா சயனம்

கோவிந்தராஜ பெருமாள் சயன கோல தத்துவம்-திருமோகூர் - பிரார்த்தனா சயனம்


மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் 274 தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.


மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம்.


ஸ்ரீரங்கம் - வீர சயனம்
மகாபலிபுரம் - தல சயனம்
திருமயம் - போக சயனம்
திருக்கோஷ்டியூர் - பால சயனம்
கும்பகோணம் - உத்தான சயனம்திருநீர்மலை - மாணிக்க சயனம்
திருவனந்தபுரம் - அனந்த சயனம்
திருமோகூர் - பிரார்த்தனா சயனம்
திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்
திருச்சித்திரக்கூடம் - போக சயனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்



திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்

 

மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகே அமைந்துள்ள திருமோகூரில் எழுந்தருளியுள்ளார் காளமேகப் பெருமாள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர்.



வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர். மந்திர எழுத்துக்களோடு காணப்படும் சக்கரத்தாழ்வார் இங்கு மட்டுமே இருக்கிறார். திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்: சக்கரத்தாழ்வார் சுதர்சனர் அம்சம் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.

 

மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே. சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது.

 

மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம்.

 

ஸ்தல பெருமைகள்:

 

நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்த தலம். மோகினி ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

 

ஸ்தல புராணம்: தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

 

அமிர்தம் கிடைக்க திருப்பாற்கடலை கடையும் சமயம்.  அந்த அமிர்தத்தின் ஒரு  துளி இங்கு உள்ள தெப்பக்குளத்தில் விழுந்ததாகவும்.  இதற்கு தெற்கே  பெருமாள் பள்ளி கொண்டிருப்பதாகவும் புராண வரலாறு.  

 

இவ்வித  பிரார்த்தனா சயன  திருக்கோலம்.  108 திவ்ய தேசங்களில்  காண முடியாதது.  சுதர்ஸன சன்னதி முன் பக்கம் சக்கரத்தாழ்வார்,  பின் பகுதியில் நரசிங்க பெருமாள்.  48 தேவதைகள்  சூழ  வீற்றிலிருந்து  ஆறு வட்டங்களுக்குள் 154 அட்சரங்கள்  பொறித்திருக்க  16 ஆயுதங்கள்,  16 திருக்கரங்கள்   கொண்டு மூன்று கண்களுடன் நெருப்பாக ஜொலிக்கும்  வண்ணம் காணப்படுகிறது.  

 

இது மிகவும் சிறப்பான அமைப்பு.  இந்த இடத்தில்தான் விஷ்ணு,  மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் வழங்கிய தலம்.   புலஸ்திய முனிவருக்கு பகவான் தெய்வ தரிசனம் கொடுத்த இடம். 

 

அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார்.

 

பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோனவூர் என்றிருந்து பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறது. 

 


பாடல் பெற்ற தலம் நம்மாழ்வார் தமது முப்பத்தி இரண்டாவது வயதில் இருந்த இடத்தில் இருந்தே நூற்றியெட்டு திருப்பதிகளில் முப்பத்தாறு தலப் பெருமாளைப் பாடுகின்றார்.

 

அவர்களில் இத்தலத்து பெருமாள் மட்டுமே நம்மாழ்வரை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

 


மூலவர்: காளமேகப் பெருமாள்

பெருமை: திவ்ய தேசம்

உற்சவர்: ஸ்ரீஆப்தன்

தாயார்: மோகனவள்ளி

தலவிருட்சம்: வில்வம்

தீர்த்தம்: ஷீராப்தி

விமானம்: கேடகி

புராணப் பெயர்: மோகனபுரம்

சிறப்பம்சம்: சக்கரத்தாழ்வார்





ஆலயத்தை அடையும் வழி: மதுரையிலிருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் இருக்கின்றன.


பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.


இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம் நமசிவாய 


ஓம் நமோ நாராயணாய


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்