தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு குறித்து ஸ்டாலின் கருத்து


மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை.


நேற்று  நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில்  ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது.  இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. அப்போது தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.


இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின், "மதுரை, ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள். வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


இரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்." கோரிக்கை விடுத்துள்ளார்.