தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம்

 *தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டார்


 தண்டையார்பேட்டை வால்டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார்.


இவரது விபத்துக்கு அரசு சார்பாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.


இது தொடர்பாக வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கவுஸ் மைதீன் என்ற வழக்கறிஞரை ஏழுமலையின் மனைவி புஷ்பா வயது 50 நாடி,அவரது மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேவையான அனைத்து இறப்பு சான்றிதழ் மற்றும் மற்ற சான்றிதழ்களை கொடுத்து, ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை நான்கு நாட்களுக்கு முன்பு வந்ததுள்ளது.காசோலையை  கொடுப்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜூனியர் அசிஸ்டெண்ட் முருகன்  புஷ்பா மற்றும் அவரது மகன் சரவணனிடம் தொலைபேசி மூலம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் கேட்டு உள்ளார். பணம் இல்லாத நிலையில் வழக்கறிஞர் கௌஸ் மைதீன் இடம் அணுகியுள்ளனர் வழக்கறிஞர் தனது சொந்தப் பணத்துடன் இன்று ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர்.


அதன்பேரில் டிஎஸ்பி வெற்றி செழியன் தலைமையில் லஞ்சப்பணம் 5 ஆயிரம் ரூபாயை ரசாயன கலவை தடவி சரவணன் மற்றும் அவரது தாயார் புஷ்பா விடம் கொடுத்து கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஜூனியர் அசிஸ்டென்ட் முருகனிடம் கொடுத்தவுடன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றுக்கொண்டு வெளியே வந்தனர்.


அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வெற்றி செழியன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகனை இடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்துடன் கையும் களவுமாக பிடித்தார்கள். அவருடன் மேலும் இருவர் கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்து சென்றனர்.


அந்த நேரம் வந்த கோட்டாட்சியர் ரவி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருவதை தெரிந்து கொண்டு அலுவலகத்திற்கு வராமல் வேகமாக திரும்பி சென்றுவிட்டார்.