“நான் சொல்றத சாப்பிடு..” உணவை பட்டியலிட்ட வடகொரியா..! அதிபர் அதிரடி.
குறிப்பிட்ட சில நாடுகளில் இருக்கும் சட்டங்கள், மற்ற நாட்டை சேர்ந்த மக்களுக்கு வித்தியாசமாக தோன்றும். இவ்வாறு பல்வேறு விநோதமான சட்டங்களுக்கு பெயர் போன நாடு என்றால், அது வடகொரியா தான்.
இதுமட்டுமின்றி, இந்த நாட்டில் சர்வதிகாரம் தலையோங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வடகொரிய நாட்டில் புதியதொரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, அடுத்தடுத்து வந்த 3 புயல்கள், பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உருவானதால், அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் விதமாக அதிரடி அறிக்கை ஒன்றை அந்நாட்டு அதிபர் வெளியிட்டுள்ளார். அதில், உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் தெரிவித்தார்.
மேலும், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளார்.