தீபாவளி ட்ரீட்டாக வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' மூவி டீசர்


தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்து டீசர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் . இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . 


அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.


மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.


அதிலும் செல்லம்மா பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஹிட் அடித்தது .


இந்த நிலையில் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு பலர் டீசர் , டிரைவர்களை வெளியிட உள்ள நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் படத்தின் அப்டேட்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .


அந்த வகையில் சிவகார்த்திகேயன் அவர்களின் டாக்டர் படத்தில் இருந்து டீசரை தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது