மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடல் சீற்றம் இல்லாத காரணத்தால் சில மீனவர்கள் கடலுக்குச் செல்வதாக தகவல்கள் வருகின்றன. தமிழகத்தை நோக்கி மற்றொரு புயல் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே, மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. மீறினால், அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கள ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.