‘ஓம்’ அச்சிடப்பட்ட மிதியடியால் சர்ச்சை

 ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள பிரபல நிறுவனத்தின் இணையதள பக்கத்தில், ஆயிரக்கணக்கான பொருட்கள் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்படுகின்றன.


இதில், இடம் பெற்றுள்ள மிதியடிகள், தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.  வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் உள்ள இந்த மிதியடியில், ‘ஓம்’ என்ற சின்னம்  அச்சிடப்பட்டுள்ளது.


இது, இந்துக்களின் மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்நிறுவன விற்பனை பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரம், சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.