போலீஸ் வேடத்தில் வந்து நகை கொள்ளைபெங்களூர் நகரில் நகைகளுக்கு பாலீஷ் போடும் கீதா ஜுவல்லர்ஸ் கடையில் போலீஸ்காரர்கள் போல் வந்து, நகை கடையில் போலி நகைகள் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது.


புகாரின் பேரில் விசாரணை நடத்த வந்திருப்பதாக கூறி 800 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் 12ம் தேதி நடந்துள்ளது.


கடந்த 12ம் தேதி ஜீப் ஒன்றில் 6 பேர் நகர பேட்டையில் உள்ள தங்க நகைகளுக்கு பாலிஷ் போடும் கீதா ஜூவல்லரி கடைக்கு வந்துள்ளனர்.


இக்கடையில் போலி நகைகளுக்கு பாலிஷ் போட்டு மோசடி செய்து வருவதாக புகார் வந்துள்ளது. விசாரிக்க வந்திருக்கிறோமென கூறி நகைகளை பார்வையிட்டனர்.


எங்கேமுதலாளி வர சொல்லுங்கள் என மிரட்டி உள்ளனர் கொல்கத்தாவில் உள்ள இதன் முதலாளி கார்த்திக் விரைந்து வந்துள்ளார். அதற்குள்ளாக 800 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து பறந்து சென்று விட்டனர்.


கொல்கத்தாவில் இருந்து வந்த உரிமையாளர் தமது கடைக்கு வந்து பார்த்தபோது போலி போலீஸ்காரர் போர்வையில் வந்தவர்கள் 800 கிராம் தங்கத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.


இதன் பேரில் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். கடையில் இருந்த வேலைக்காரர்கள் கொடுத்த தகவலில் ஜீப் எண் தெரிந்து விசாரித்தனர்.


இதில் 4 பேர் சிக்கினர் மேலும் இருவர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கண்ட விபரங்களை போலீஸ் டி.சி.பி. அனுசேத்தன் தெரிவித்துள்ளார்.