செய்திகள்

 சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆட்டோ, கார், 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம் ஆகின.கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள வாகனங்களுக்கும் பரவின.


-------------------------------


சென்னை வளசரவாக்கத்தில் ஏ.சி.கருவி வெடித்து பள்ளி ஆசிரியர் முத்தாயம்மாள் பலத்த காயம் அடைந்தார்.பலத்த காயம் அடைந்த முத்தாயம்மாள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


--------------------------------------


சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது.


------------------------------------


சென்னை திநகரில் நகைக் கடையில் கொள்ளையடித்த மார்க்கெட் சுரேஷுக்கு எயிட்ஸ் நோய் என போலீஸ் தகவல் அளித்துள்ளது. அண்மையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் எய்ட்ஸ் நோயால் பெங்களுருவில் உயிரிழந்தான்.கொள்ளையன் முருகனை தொடர்ந்து தற்போது கைதாகி உள்ள சுரேஷுக்கும் எய்ட்ஸ் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.


------------------------------------


 கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார்.குயின்ட் தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பாலுசாமி என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.