தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு


 நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி - தமிழக அரசு.


 தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 


9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி.


பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.


நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி.


அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.


காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம் - தமிழக அரசு.


கோயம்பேடு சந்தையில் பழ மொத்த வியாபாரம் 2 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.


அரசியல், மதம், பொழுது போக்கு உள்ளிட்ட கூட்டங்களுக்கு 16 ஆம் தேதி முதல் அனுமதி.


100 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் கூட்டங்களை நடத்தலாம் என்று உத்தரவு.


பொழுது போக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.


திருமண நிகழ்வுகள், இறுதி ஊர்வலங்களில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி.


60 வயது மற்றும் அதற்கு குறைவான வயது உள்ளவர்களும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல நாளை முதல் அனுமதி.


ஏற்கனவே 50 வயது வரை உள்ளவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


சின்னத்திரை உள்பட திரைப்பட படப்பிடிப்புகளில் ஒரே நேரத்தில் 150 பேர் வரை பணி செய்ய அனுமதி.


படப்பிடிப்புகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.