இஸ்ரோ சாதனை - பாராட்டத்தக்கது - டாக்.ராமதாஸ்

 


செயற்கை கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை செய்திருப்பது பாராட்டத்தக்கது.


பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3.02 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணாமாக, 10 நிமிடம் தாமதமாக ஏவப்பட்டது. இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் இந்த ராஃக்கெட்டில் உள்ளது.


இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், "ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ஏவுகலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின்  செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட தடைகளை முறியடித்து குறைந்த விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் செயற்கைக்கோளை செலுத்தி, இஸ்ரோ சாதனை படைத்திருப்பது பாராட்டத்தக்கது. இதற்கு காரணமான இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்." என பதிவிட்டுள்ளார்.