நிவர் புயல்’ – யார் இந்த பெயரை சூட்டியது! இதன் பின்னணி என்ன


தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திக் கொண்டிருக்கு நிவர் புயலுக்கு பெயர் சூடிய நாடு எது? அந்த பெயரின் பின்னணி என்ன?


வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது, தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது புதுச்சேரியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், புயல் கரையை நெருங்க நெருங்க அதன் பாதை வடமேற்கு நோக்கி மாறலாம் என சொல்லப்படுகிறது.


நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயலுக்கு, ஈரான் நாடு தான் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இந்த புயலின் பெயர், பெயர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த வருடம் மேற்கு வங்க தேசத்தில் பெரிதும் சேதம் ஆகிய அம்பான் புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து. மேலும் கடந்த ஜூன் மாதம் மகராஷ்டிராவில் கரையை கடந்த நிஷாக்ரா புயலின் பெயரை வங்கதேசம் பரிந்துரை செய்தது.


ஒவ்வொரு நாடும் சுமார் 13 பெயர்களை பரிந்துரை செய்கிறது. இந்தப் பெயர்களை பரிந்துரை செய்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. 


அந்த நிபந்தனை என்னவென்றால், குறிப்பிட்ட பெயரில் அரசியல், கலாச்சாரம், மதநம்பிக்கை இவைகள் கலக்காத பொதுவாக பெயராக இருக்க வேண்டும் என்றும், உலக அரங்கில் இருக்கும் மக்கள் எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அமையக்கூடாது.


பெயரின் அளவு அதிகபட்சம் 8 எழுத்துகள்தான் கொண்டிருக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மக்களாலும் உச்சரிக்கப்படும் பெயராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வட இந்திய பெருங்கடலில் ஒரு முறை பயன்படுத்திய பிறகும் மீண்டும் அந்த பெயர் பயன்படுத்த முடியாது.


இந்தியா அடுத்து வர இருக்கும் புயல்களுக்கு கதி, தேஜ், முரசு, ஆக், நீர் ஆகிய பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறது. மொத்தமாக 179 பேர் இடம் பெற்றிருக்கும் அவற்றிலிருந்து ஒவ்வொரு பிரிவுக்கும், ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைப்படி அதில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் பயன்படுத்தப்படும்.


மேலும், உலக  ஆராய்ச்சி மையத்திடம், அடுத்த 5 ஆண்டுகளில் வரவிருக்கும் புயல்களுக்கான பெயர் பட்டியல் தயாராக உள்ளது.