குறுஞ்செய்திகள்

 மயிலாடுதுறை குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். நள்ளிரவிலும் பிரச்சார பயணம் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திட்டமிட்டபடி நாளையும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் மீண்டும் உறுதியளித்துள்ளார்.


__________________________


கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஏர் கலப்பை பேரணியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து கருமத்தம்பட்டியில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிறகு பேரணி சென்ற போது கைது செய்யப்பட்டார்.


_________________________________


 


ஐ.எம்.ஏ. முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஷன் பெய்க் அமைச்சராக இருந்த போது ஐ.எம்.ஏ. நிறுவனத்திடமிருந்து பல கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.


_____________________________


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 55 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.


__________________________________


சென்னை யானைக்கவுனி கொலைகள் தொடர்பான முன்னாள் ராணுவ அதிகாரியிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைலாஷிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளர் முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பது தெரிய வந்துள்ளது.