சாத்தான்குளம் தந்தை-மகன் விவகாரத்தில்   விசாரணை நடைபெறுகிறது.

 


சாத்தான்குளம் தந்தை-மகன் விவகாரத்தில்  இன்று விசாரணை நடைபெறுகிறது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது சிபிஐ .


முதலில்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை சிபிஐ விசாரித்தது. விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இரண்டாவதாக கைது செய்யப்பட்ட  வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது . இதனையடுத்து 3  காவலர்களும்  சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதற்குஇடையில் கொரோனா காரணமாக  காவலர் பால்துரை உயிரிழந்தார்.இந்த வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  முதல் வழக்கு விசாரணை துவங்குகிறது.  


போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.9 போலீசாரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது.