பெண்ணின் வீட்டில் குப்பை கொட்டிய நகராட்சி- அசத்தல் காரணம்..

 ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் சில பகுதிகளை நகராட்சி ஆணையர் தினகர் புண்ட்கர் பார்வையிட்டார். அப்போது பெண் ஒருவர், குப்பைகளை, குப்பை தொட்டியில் போடாமல், தெருவில் வீசுவதை ஆணையர் பார்த்தார்.


இதனால் கோபமடைந்த அவர், அங்கிருந்த துப்புரவு பணியாளரிடம், ஒரு அட்டை பெட்டியில் குப்பையை நிரப்பி கொண்டு வருமாறு கூறினார்.


அந்த பணியாளரும் குப்பையை அட்டைபெட்டியில் நிரப்பிக் கொண்டு வந்து நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, அந்த பெண்ணின் வீட்டு வாசலில் கொட்டினார்.


மேலும் அடுத்தமுறை சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த பெண்ணை எச்சரித்தார்.