மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(நவ.,16) வெளியிட உள்ளார். கவுன்சிலிங் துவங்கும் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 4061 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; பல் மருத்துவ படிப்பில் 2000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இம்மாதம் 3ம் தேதி துவங்கி; 12ம் தேதி நிறைவடைந்தது.
இந்த படிப்புகளுக்கு 38 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோருக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிடுகிறார்.
நேரடி கவுன்சிலிங் நவ.18ம் தேதி அல்லது 19ம் தேதி துவங்க உள்ளது. நடப்பாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் 304; பி.டி.எஸ். படிப்பில் 91 இடங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.