ஐந்து வினாடி தான்! சிறுவன் செய்த அட்டகாசமான செயல்

 கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்த சிறுவன்.

நியூயார்க்கில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வேடிக்கையான ஒரு விளையாட்டில் ஈடுபட்டார்.


அந்த விளையாட்டு என்னவென்றால், அந்த சிறுவனிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால், அச்சிறுவனுக்கு கொடுக்கப்படும் ஐந்து வினாடிகளில், அவனுக்கு தேவையான பொருட்களை அந்த மளிகை கடையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.


இதனையடுத்து, அந்த சிறுவனிடம் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.


அந்த சிறுவன்  சரியான பதில் அளித்துள்ளார். இந்நிலையில், 5 விநாடிக்கான கவுண்டவுன் தொடங்குகிறது.


முதலில் சிறுவன் இயற்கையான உணவு பொருட்கள் தான் தேர்ந்தெடுக்கிறார். அதன் பின் தான் செயற்கை உணவுகளின் பக்கம் செல்கிறார்.


இதனையடுத்து, இந்த சிறுவன் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும், பலர் சிறுவனை பாராட்டியும் உள்ளனர்.