ஸ்படிக மாலையினால் ஏற்படும் நன்மைகள்

நமது  உண்மை   செய்திகள்  ஆன்மீக குழுவிலிருந்து ஸ்படிக மாலையினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பதிவுகள் :


 படிகாரம் என்பதும், ஸ்படிகம் என்பதும் வேறு வேறு.


பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம் சக்தியின் அம்சமானது.


பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும்.


அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து, கம்பிகள் இல்லாத, உடைசல்கள், பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில்கொட்டிக் கிடப்பதுண்டு.


துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும். அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உருண்டையாகவும் பட்டை தீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு உள்ளே புகையோ, கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிக கற்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் .


உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது . நீரோடு நீராக ஒன்றி இருக்கும் தனியாக தெரியாது. அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும்.


முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.


சூரிய ஒளியில் இம்மணியை காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி தெரியும், நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால் தீப்பொறி உண்டாகும் . இதுவே படிகத்தை சோதிக்கும் முறை.


இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில் சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை உடைத்துத் தோண்டும் பொழுது அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல்(Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.


ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது.


இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600, அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்


அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108, ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.


அழகு, தெய்வப்பிரியம், ஆத்தும தரிசனம், ஆரோக்கிய இரட்சை, ஸதானக் குறிப்பு, தோஷ நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம்.


பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும், காதிலும், மூக்கிலும், உதட்டிலும், கழுத்திலும், தோளிலும், புஜத்திலும், கையிலும், மார்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு.


தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு.


இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகை. ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து, படிக மாலையை தண்ணிர், பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.


எந்த காலமானாலும் வெப்பத்தை தடைசெய்யும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம்மாலைக்கு இயலும், இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தன்நீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர்.


பௌர்ணமி நாள் படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன.


இப்படி தனக்குள் உள்ள ஒளியின் நிறமாலையை நம் உடலுக்குள் படிகமாலை அனுப்புவதை இதன் மூலம்அறியலாம். ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த ஸ்படிக மாலைக்கு உண்டு.


அதனால் தான் தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும்.


மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும்.


இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயேஇருக்கிறது.


மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான்அமைதியாக இருக்கும்.


ஸ்படிக மாலை நமது மனதை அலை பாயும் பீட்டா நிலையில்இருந்து அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும்.


நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட வேண்டும்.


பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.


ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை அதிகமாக இருக்கும்.


இப்படிப்பட்ட ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.


ஸ்படிக மாலை அணிவது நமது உடலில் அதீகமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.


ஸ்படிக மாலை நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல் சூட்டை சீரான சரியான அளவில் வெய்க்கும்.


ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.


நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு இணையாக. வேறு எதற்க்கும் இல்லை.


ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்தின் பிம்பமாக இருக்கும்.


தனது சக்தியை தனது அருகிலுள்ள மணிக்கு இது எளிதாக கடத்த வல்லது.


ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மின் காந்த நிறம்உண்டு.
இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு நிறங்கள்எங்கும் வியாபித்திருக்கின்றன.


தீய சக்திகளிலிருத்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் , தொழில் ரீதியான வளர்ச்சிக்கும் இந்த மாலையை பயன்படுத்தலாம்.


வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில்பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும்.


அசைவ உணவு சாப்பிடும், தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும்போகும் அணியக்கூடாது.


ஸ்படிகத்திற்கு மின்சாரத்தை தாங்கக்கூடிய சக்தி உள்ளது. ஸ்படிகலிங்கம் வீட்டில் வைத்துபூஜை செய்தால் சகலவித நன்மைகளும் கிடைக்கும்.


இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனம் மிகவும்சிறப்பு வாய்ந்தது.


இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம்.


இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும்.


அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச்செய்ய வேண்டும்.


அந்த தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம்.


எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம் நமசிவாய  ஓம் நமோ நாராயணாய


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்