"வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக" - டிரம்ப்-தேர்தல் வழக்கு தள்ளுபடி

 



அதிபர் தேர்தல் வாக்குக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் "வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது.


நேற்று 05.11.2020 முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.


இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார். டிரம்ப் வெற்றி பெற 56 சபை வாக்குகள் தேவைப்படுகிறது.


இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்துமாறு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக 3 மாகாணங்களில் வாக்கு எண்ணும் பணிகளை டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


டிரம்ப் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தள்ளுபடி: ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் அதிரடி