செல்ஃபி மோகத்தால்... இளைஞர் மார்பில் பாய்ந்த தோட்டா

 செல்பி மோகத்தால் தன்னை தானே சுட்டுக் கொண்ட இளைஞர் பரிதாபமாக பலி.


உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் செல்பி எடுப்பதற்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து வந்த 22 வயது நபர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.


உயிரிழந்த நபரும், அவரது நண்பரும் நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் அமர்ந்தபடி மாவி என்பவர் துப்பாக்கியை எடுத்து செல்பிக்கு போஸ் கொடுத்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு  அவரது மார்பில் பாய்ந்தது.


உடனடியாக காரில் இருந்த  அவரது நண்பர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.