தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்

 


தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும்.

 

ஏன் என்று தெரியுமா? உடலுக்கு ஏற்ற வயிறு இல்லாமல், கர்ப்பிணி போன்று வீங்கி இருப்பதாலே ஆகும். அதே சமயம் அனைவரது மனதிலும் இனிமேல் நாம் கடுமையான டயட்டை பின்பற்றி, ஒல்லியாக மாற வேண்டுமென்ற எண்ணமும் எழும்.

 

ஆனால் சிலரைப் பொறுத்தவரை அது வெறும் பேச்சாக இருக்கும். சிலரோ சரியாக சாப்பிடாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காதவாறு டயட் இருப்பார்கள்.ஆனால் அப்படி கடுமையான டயட் இல்லாமல், மிகவும் ஈஸியாக, டயட்டில் இருப்பது போன்றே தெரியாதவாறு, எப்போதும் இருப்பது போல் சாதாரணமாக இருந்தாலே தொப்பையை குறைக்கலாம் என்று சொன்னால், அதிலும் இரண்டே வாரங்களில் எளிதாக தொப்பையைக் குறைக்கலாம் என்று சொன்னால் நம்பமாட்டோம். ஆனால் அந்த வழியைக் காண அனைவரும் ஏங்குவோம். என்ன சரி தானே!

 

தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.


தொப்பையை குறைக்க சில வழிமுறைகள்.


இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்  போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.


தூக்கம் 


ஒரு மனிதனின்  ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. தூக்கம்  குறையும் பட்சத்தில், உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதோடு, உடல் எடை அதிகரிப்பால், பல நோய்கள் நமது உடலில் ஏற்படுவதற்கும் தூக்கமின்மை வழிவகுக்கிறது.


நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

 


உப்பை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்

 


காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்

 

இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.
மதுப்பழக்கம் 

இன்று மிக  சிறிய வயதிலேயே பலரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த பழக்கம் தற்போது பெண்களுக்கும் உள்ளது. மது அருந்துவதால், அடி வயிற்று பகுதியில், கொழுப்புக்கள் சேர்ந்து, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.


பட்டினி 


இன்று பலரும் தங்களது வேலைக்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதற்காக, சாப்பிடாமல், வெகுநேரம் பட்டினியாய் இருக்கிறோம். இவ்வாறு பட்டினி கிடைப்பதால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதோடு, உடல் எடையும் அதிகரிக்கிறது.


பாஸ்ட்புட் உணவுகள் 


இன்று நாம் நமது கலாச்சார உணவுகளை மறந்து, பாஸ்ட்புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், நமது உடலுக்கு தீமையான பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால், உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமன் அதிகரிக்கிறது.


உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.

தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

 


நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.நன்கு மூச்சு விடவும்

 

தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.தண்ணீர் அதிகம் குடிக்கவும்


 

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.

நடக்கவும்

 


எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.

மெதுவாக சாப்பிடவும்


 

எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும்.பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி

 

தினமும் உடற்பயிற்சி செய்யும் போது பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறைவதில் நல்ல மாற்றம் தெரியும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்