6 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை மையம்

 6 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 


கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 அணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.