காட்டிற்கே ராஜாவான சிங்கத்தின் பரிதாபமான நிலை


 


நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் பரிதாபமான நிலை. 


காட்டிற்கு ராஜாவான சிங்கம் என்றாலே, நமக்கு முன்பாக கெம்பீரமான தோற்றம், மிரட்டும் பார்வை, கெம்பீரமான நடை என இவை தான் நியாபகத்திற்கு வரும்.


ஆனால், நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் இருக்கும் சிங்கத்தின் நிலை, பார்ப்பாதற்கே பரிதாபமான நிலையில் உள்ளது.


இந்நிலையில், நைஜீரியாவில் உள்ள காம்ஜி காட் மிருக காட்சி சாலையை பார்வையிட சென்ற சுற்றுலாப்பயணி ஒருவர், அங்குள்ள சிங்கத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.


அங்கு, எலும்பும், தோலுமாக ஒரு சிங்கம் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. இந்த சிங்கத்திற்கு போதுமான அளவு உணவு அளிக்கப்படவில்லை என்பது நன்கு தெரிந்தது.


இதனையடுத்து, அந்த சுற்றுலாப்பயணி, சிங்கத்தின் நிலை உலகிற்கு தெரியட்டும் என புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.


இந்த புகைப்படத்தை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, புகைப்படம் எடுத்த அந்த நபர் கூறுகையில், இன்னும் பல விலங்குகள், அங்கு போதுமான அளவு உணவு அளிக்கப்படாமல் இருப்பதாகவும், தற்போது இந்த செய்தி வெளியான பின், அந்த சிங்கம் மீட்கப்பட்டு மருத்துவ காண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், மிருக காட்சி சாலையில் உள்ள மற்ற மிருகங்களுக்கு உணவு அளிப்பதற்காக தன்னார்வலர்களையும் இணைத்து கொள்ள நைஜீரிய அரசுடன் பேச்சு வார்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளர்.