ஜிஎஸ்டி மோசடி:4 பேர் கைது

 



ஜி.எஸ்.டி., இன்டிலிஜன்சி பீரோ அமைப்பினர், பெங்களூர், டெல்லி, மும்பை நகரங்களில் நடத்திய அதிரடி விசாரணையில் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.



இந்த வரி மோசடி தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த சர்வதேச கம்பெனியுடன் கைகோர்த்து இவ்வளவு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுவரை நடந்த மோசடியில் இதுதான் மிகப்பெரிய மோசடி என தெரிய வந்திருக்கிறது. மோசடி செய்த குற்றவாளிகள் ஒரு ஆயிரம் ரூபாய் கோடி மதிப்புள்ள போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.


சீனா உட்பட பிற நாடுகளின் கம்பெனிகளின் போலி இன்வாய்ஸ்களை சேகரித்து உள்ளதை விசாரணையின் போது கண்டுபிடித்துள்ளனர்.
ஜிஎஸ்டி இன்டெலிஜென்ஸ் டைரக்டரட் ஜெனரல் பெங்களூரு பிரிவின் அதிகாரிகள் நடத்திய சரக்கு சேவை வரி ஜிஎஸ்டி மோசடியில் இதுதான் பெரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.


பல்வேறு இடங்களில் கிரடிட் ஐ.டி.சிக்கு உட்பட்ட ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர்.  மோசடி கணக்கு விபரம் பரிசோதனை இன்னும் நடந்துவருகிறது.


டெல்லியை சேர்ந்த கமலேஷ் மற்றும் அவரது போலி நிறுவனங்கள் பெயரில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ஆவணங்கள் வைத்து இருந்ததை விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.



பெங்களூரில் ஒரு சீனாவின் பீஜிங் கம்பெனி ஒரு ஒப்பந்தம் செய்து, போலி மிஸ்திரி 23 கம்பெனிகள் நாடெங்கிலும் ஆரம்பித்து உள்ளனர்.


பெங்களூரில் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இதற்காக முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். கம்பெனிகள் தமது பெயரில் ஆரம்பிக்க ஆவணங்களுக்கு செலுத்த வேண்டிய 80 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி வரிகளை போலி இன்வாய்ஸ்களை உருவாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தங்களின் கம்பெனிகளுக்கு அதிக லாபம் பெற வியாபாரம் செய்துள்ளது, வங்கிகளின் மூலம் கடன் உதவி, தள்ளுபடிகள் நடத்தியிருப்பது மோசடியில் தெரியவந்திருக்கிறது.இவைகளை பரிசீலனை செய்தபோது மோசடி செய்திருப்பது உறுதியாகி உள்ளது.


பெங்களூர் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணய்யா பல சீனாவில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு போலி இன் வாய்ஸ்களை பெற்று தமது வர்த்தகத்தை நடத்தியிருக்கிறார்.


சீனா கன்ஸ்ட்ரக்ஷன் சௌசம் இந்தியா பிரைவேட் லிமிடெட், மற்றும் குவாங்கோ கன்ஸ்ட்ரக்ஷன் அனுப்பியிருந்த 53 கோடி ரூபாய் வி சார்ட் மெசேஜ்களை சேவை மூலம் மோசடி நடந்து இருப்பதையும் சுங்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.