துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை

 



 


துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை.


துருக்கியில், ஏகன் தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.0-ஆக பதிவாகியுள்ளது. இதனால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது.


இந்த இயற்கை சீற்றத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.


1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில், 3 நாட்களுக்கு பின் இடிபாடுகளில் சிக்கிய 3 வயது பெண் குழந்தை, "நான் இங்கே இருக்கிறேன்." என குரல் கொடுக்க, மீட்பு குழுவினர் விரைந்து சென்று, குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.


இதற்க்கு முன்பதாக, நிலநடுக்கம் ஏற்பட்டு, 33 மணி நேரத்திற்கு பின் 70 வயது முதியவர் மற்றும் 68 மணி நேரத்திற்கு பின் சிறுகுழந்தை ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.