பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார்


 


பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28,  நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 


இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜாக  இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும்  இணைந்த  கூட்டணியும்  களத்தில் உள்ளது.


வாக்கு எண்ணிக்கைகாக  38 மாவட்டங்களில் 55 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்படும் என மாநில  தேர்தல் அதிகாரி சீனிவாஸ் தெரிவித்தார்.


இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  10.11.2020 காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், அனுராக் நாராயண் கல்லூரியில் வாக்குச் சாவடி மையத்தை தேர்தல் அதிகாரிகள் திறந்தனர்.


தற்போது வாக்கு  எண்ணிக்கை தொடங்கியுள்ளது .முதல்கட்டமாக பீகாரில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றது.