சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை 356 பிறந்த நாள் ( 16 நவம்பர், 1664 )


சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும்.


இது சென்னை நடு தொடர்வண்டி நிலையத்திற்கு (Chennai Central Railway Station) எதிரில் அமைந்துள்ளது. 


16 நவம்பர், 1664 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாருக்கு மருத்துவம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது.


தொடக்கத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் 25 ஆண்டுகள் இருந்தது. படிப்படியாக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.


ஆளுநர் சர் எலிஹு யேல் என்பவரால் 1690 ல் கோட்டையிலேயே வேறொரு இடம் ஒதுக்கப்பட்டு இடமாற்றப்பட்டது. ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது.


1664 நவம்பர் 16 அன்று அரசு பொது மருத்துவமனை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் போர் வீரர்களின் நலனுக்காக ஒரு சிறிய மருத்துவமனையாக தொடங்கப்பட்டது.


இதன் முதல் நிறுவனராக இருந்தவர் சென்னை மாகானத்தின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகவராக இருந்த சர் எட்வர்ட் (Edward Winter (English administrator)) அயராத எழுச்சியூட்டும் முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்டது.


அரசு பொது மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் 25 ஆண்டுகளாக ஒரு சாதாரண மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனையாக வளர்ந்தது வந்தது.


அப்போதைய ஆளுநர் சர் எலிகூ யேல் (Elihu YaleApril 5, 1649 – July 8, 1721) யேல் பல்கலைக்கழகம் ஆரம்ப புரவலர் மருத்துவமனையின் வளர்ச்சிக்காக 1690 ஆண்டு காலகட்டங்களில் மிகவும் உதவிசெய்தார்.


1772ல் மருத்துவமனை ஆங்கிலோ பிரஞ்சு போருக்கு (War of the Austrian Succession) பின்னர் கோட்டைக்கு வெளியே தற்போதைய நிரந்தர இடத்தில் அமைய அப்போதைய சென்னை மாகாணத்தில் 20 ஆண்டுகள் பிடித்தன.


மருத்துவமனை (Hospital) என்பது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு சிறப்பு சுகாதார நிறுவனம் ஆகும். இங்கு மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், சுகாதாரத்தை பராமரிக்க உதவும் இதர பணியாளர்கள் மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவ சேவைக்காக பணியாற்றுகிறார்கள்.


பொது மருத்துவமனை என்பது அனைவராலும் அறியப்படும் ஒரு வகை மருத்துவமனையாகும். குறிப்பாக இம்மருத்துவமனையில் அவசரப் பிரிவு என்று தனியாக ஒர் அலகு செயல்படுகிறது.


தீ விபத்து, முதல் சாலை விபத்து மற்றும் திடீர் நோய்கள் வரை பாதிக்கப்படும்  நோயாளிகள் பலருக்கும் உடனடியாக சிகிச்சையளிக்க இந்த அவசரப் பிரிவு இயங்குகிறது.


இங்கு தீவிர சிகிச்சைக்காக பல படுக்கைகளும் நீண்டகால பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகளும் இருக்கும்.


அடி, விபத்து போன்றவற்றால் உண்டாகும் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் அவசரப்பிரிவு , புணர்வாழ்வு மருத்துமனை, குழந்தைகள் மருத்துவமனை, தாய் சேய் நல மருத்துவமனை, மனநல மருத்துவமனை, தனித்தனியான நோய்க்கான மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் அனைத்தும் சிறப்பு மருத்துவமனைகள் ஆகும்.


சிறப்பு மருத்துவமனைகள் பொது மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது சுகாதார செலவினங்களைக் குறைக்க உதவும்.


பெறப்பட்ட வருமான ஆதாரங்களைப் பொறுத்து மருத்துவமனைகள் பொது மருத்துவமனை, சிறப்பு அல்லது அரசு மருத்துவமனை என வகைப் படுத்தப்படுகின்றன


கற்பித்தலுடன் இணைந்த மருத்துவமனை மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கற்பித்தலுடன் மக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.


மருத்துவமனைகளில் பல்வேறு வகையான துறைகள் இயங்குகின்றன. அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை இருதயவியல், இருதய அறுவை சிகிச்சை  பிரிவு, ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை  பிரிவு,   எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு மற்றும் தொண்டை பிரிவு,  புற்றுநோய் பிரிவு , நரம்பியல் மருத்துவ  பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு,  சிறுநீரக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை  பிரிவு போன்ற பல சிறப்பு பிரிவுகள் தனித்தனியாக இயங்குகின்றன.


சில மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவுகளும், நாள்பட்ட நோய்சிகிச்சை பிரிவுகளும் உள்ளன. மருந்தகம், நோயியல் மற்றும் கதிரியக்கவியல் போன்ற துறைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுவாக காணப்படுகின்றன.


மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட மருந்தகங்களில் அரசு செயலக மருந்தகம், அரசு உயர் நீதிமன்ற மருந்தகம், அரசு சேப்பாக்கம் அலுவலகங்கள் மருந்தகம், அரசு தோட்ட மருந்தகம் மற்றும் அரசு ராஜ் பவன் மருந்தகம் ஆகியவை அடங்கும்.


2013-ஆம் ஆண்டுக் கணக்கின் படி நாளொன்றுக்கு 10,000 முதல் 12,000 வெளி நோயாளிகள் வரை வருகின்றனர்.


2012 மார்ச்சு மாதம் இம்மருத்துவமனை 1000 -ஆவது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையினைச் செய்தது. இந்திய அரசு மருத்துவமனைகளிலேயே இதுதான் அதிகப்படியானதாகும்


தற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார்.


பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த ஜெ. ஜெயலலிதா 2005ம் ஆண்டு திறந்து வைத்தார். 


தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி (TAEI) வழிகாட்டுதல்களின்படி, முழு அளவிலான அவசர சிகிச்சைப் பிரிவைக் கொண்ட இந்த மருத்துவமனை, முதியோர் பகுதி, புத்துயிர் விரிகுடா மற்றும் வண்ண குறியீட்டு மண்டலங்களை உள்ளடக்கியது.


2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 22 சதவீத பங்கைக் கொண்டுள்ளது, இது நகரத்தின் மருத்துவமனைகளில் மிக அதிகம்


திரவ ஆக்ஸிஜனை சேமிக்க ஒரு தொட்டியை நிறுவிய மாநிலத்தில் அரசு நடத்தும் முதல் நிறுவனமாக இந்த மருத்துவமனை திகழ்கிறது


அமைவிடம்பூந்தமல்லி நெடுஞ்சாலை,, பார்க் டவுன்,, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
 
மருத்துவப்பணிபொதுமருத்துவமனை
வகைமுழு சேவை மருத்துவமனை மற்றும் & மருத்துவ கல்லூரி
இணைப்பு சென்னை மருத்துவக் கல்லூரி
 
படுக்கைகள்2,722
 
நிறுவல்1664

இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.வளர்க மருத்துவ பணி  - வாழ்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை


தொகுப்பு மோகனா செல்வராஜ்