வறுமையை போக்க 3 திருமணம் செய்த பெண்மணி

 


வறுமையை போக்க 3 திருமணம் செய்த பெண்மணிக்கு உடந்தையாக அவரது கணவன் மற்றும் மகனும் இருந்துள்ளனர்.


கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகமே மாறிவிட்டது என்று தான் சொல்லியாக வேணும். ஊரடங்கு பல்வேறு இடங்களில் பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வேலையின்றி தங்கள் நிலையை மறந்து திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறியுள்ளனர். தற்பொழுது இந்த வறுமையின் காரணமாக பெண் ஒருவர் நூதனமான முறையில் கொள்ளையடிக்கிறார்.


27 வயதுடைய மஹாராஷ்டிராவை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 3 மாதத்தில் மட்டும் தனது கணவர் மற்றும் மகனின் உதவியுடன் மூன்று திருமணங்கள் செய்துகொண்டு கொள்ளையடித்துள்ளார்.


திருமணத்தில் எப்படி கொள்ளை என்று தானே எண்ணுகிறீர்கள். ஆம், அம்ருத் எனும் இந்த பெண்மணி ஆண்களை திருமணம் செய்துகொண்ட பின்பு அவர்கள் வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருள்களை திருடிக்கொண்டு, அந்த பொருளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்.


இது குறித்து பாதிக்கப்பட்ட ஆண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.