குரு பெயர்ச்சி 2020 சுருக்கமான பலன்கள் (தனுசு மகரம் கும்பம் மீனம் )

விகாரி வருடம் 2019ல் பெயர்ச்சியான குரு பகவான் போது தனுசு ராசியில் சஞ்சரித்து வருகிறார்.தற்போது சார்வரி வருட குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.


வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு ஐப்பசி 30 (நவம்பர் 15) ஞாயிறு அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5 (நவம்பர் 20) வெள்ளிக்கிழமை அன்று பெயர்ச்சி ஆக உள்ளார்.


இதில் குருவின் சிறப்பு பார்வையான 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை அருளால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை அளிப்பார்.மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்தால் தான் சுமாரான பலனைப் பெற முடியும்


தனுசு ராசி


இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு மிக யோகமான, பல அதிர்ஷ்டங்களைப் பெறக்கூடியதாக இருக்கும்.


2ம் இடமான குடும்ப குரு எனும் பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிகழும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நினைத்தபடி நடக்கும். எண்ணிய செயல்கள் வெற்றி அடையும்.


உங்கள் தொழில், வேலையில் லாபமான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். இருப்பினும் யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போடவேண்டாம்.


கடந்த ஓராண்டு காலமாக நீங்கள் பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் தீரும் காலமும் வந்து விட்டது. உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும்.

வழிபாடு :

முருகப்பெருமானை வணங்கிவர உங்கள் ராசிக்கு மேலும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.


மகரம் ராசி


ஜென்ம குருவாக உங்கள் ராசியில் குரு சஞ்சரிப்பவதால் உங்களுக்கு சற்று எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கும். என்றாலும் அது வருங்காலத்தில் உங்களை மேம்படுத்தக்கூடிய அனுபவத்தைத் தரும்.


ஜென்ம குருவைத் தொடர்ந்து, ஜென்ம சனி நடக்கும் காலத்தில் சனி பகவனின் மோசமான பலன்களை குரு பகவான் கட்டுப்படுத்துவார். தம்பதிகளிடையே மன கசப்பு ஏற்படக்கூடும்.


பேச்சு, செயலில் கவனமாக இருப்பதும். வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் அமைதி கூடும். பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம்.தொழில் ரீதியான முயற்சிகள் வெற்றியைத் தரும்.


வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன்,உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

வழிபாடு :

குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து, சனிப் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால் எந்த விஷயமாக இருந்தாலும் கவனமாக செயல்படுவது அவசியம்.


வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு செய்வதும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடவும்.


கும்பம் ராசி


விரய குருவாக கும்ப ராசிக்கு வந்துள்ளதால் உங்கள் ராசிக்கு சுப செலவுகள் நிகழும். உங்களின் தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிகழ்வுகள் நடக்கும்.


இருப்பினும் உங்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்க பல சோதனைகளை கடக்க வேண்டி வரும். திருமணம், வீடு, மனை கட்டுவதற்கான சுப விரயங்கள் ஏற்படக்கூடும்.


இந்த ராசிக்காரர்கள் விரைய சனியால் கவலைப்பட்டாலும் இனி குரு பெயர்ச்சியினால் பிரச்சினைகள் நீங்கும் சொத்து வாங்கலாம். புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. ஆயுளுக்கு வந்த கண்டம் நீங்கும். சனியால் ஏற்படும் சங்கடங்களை தீர்க்கப் போகிறார் குரு பகவான்.

வழிபாடு :

சனிக்கிழமைகளில் சிவ ஆலய தரிசனம் செய்வது நல்லது.


வியாழக்கிழமைகளில் சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதியில் வழிபாடு செய்வது நல்லது.


முடிந்தால் குருவின் அருள் நிறைந்த திருச்செந்தூர் சென்று வரலாம். அல்லது அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வருவதும், நவகிரகங்களில் குருவை வணங்கி வருவது நல்லது.


மீனம் ராசி


ராசிக்கு 11ம் இடத்தில் லாப குருவாக அமர்வதால் உங்களுக்கு அனைத்து விதத்திலும் லாபமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு வீடு, மனை, வாகனங்கள் வாங்குதல் போன்ற லாபகரமான, சொத்து சேர வாய்ப்புள்ளது.


சிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் / வெளிநாட்டு பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு லாபகரமான பலனும் ஏற்படலாம்.


குரு பார்வையால் உங்கள் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். இந்த குருப்பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது.

வழிபாடு:

நவகிரக வழிபாடு செய்வதும், சிவ வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரு.


கணபதிக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபட வினைகள் தீரும். சந்திரன், குரு, சுக்கிர ஹோரைகளில் உங்களுக்கான புதிய செயல்களை ஆரம்பிக்க எல்லாம் ஜெயமாகும்.