பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு


பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏக்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார்.


பீகாரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள். இந்த நிலையில் பீகாரில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.


பீகாரில் பாஜகவை விட மிக குறைவான இடங்களில்தான் ஜேடியூ வெற்றி பெற்றுள்ளது. பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ 43 இடங்களிலும் வென்றிருக்கிறது.


பீஹார் சட்டசபைக்கு, பா.ஜ., விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களில் மூவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர்கள். இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தமிழகத்தில் பணியாற்றியுள்ளனர்.


முதல்வராக நிதிஷ்குமார் இருப்பினும் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி ஜேடியூவின் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக இன்றைய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என தெரிகிறது.


அத்துடன் பாஜகவின் துணை முதல்வர் யார் என்பதும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. துணை முதல்வர் யார்? துணை முதல்வர் பதவிக்கு பாஜகவின் காமேஸ்வர் செளபால் பெயர் அடிபடுகிறது.


1980களில் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் பணியாற்ற தொடங்கியவர். அயோத்தி ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கிய பங்கெடுத்தவர் என்பதால் காமேஸ்வர் செளபால், துணை முதல்வராக வாய்ப்பு உள்ளது.