டாடா குழும அறக்கட்டளை சார்பில் அதிமுகவுக்கு நன்கொடை

 


டாடா குழும அறக்கட்டளை சார்பில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி நன்கொடை.


அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, டாடா குழும தேர்தல் அறக்கட்டளை  சார்பில், ரூ.46.78 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.


இது தனி நபரால் அல்லது குழுமத்தால் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் பெறப்பட்ட மொத்த பங்களிப்புகளில், கிட்டத்தட்ட 90% ஆகும்.


இதுமட்டுமல்லாமல், அதிமுகவுக்கு ஐடிசி நிறுவனமும் 2019-2020-ல், தேர்தல் நன்கொடையாக ரூ.5.39 கோடியை, இரண்டு தனி காசோலைகளாக வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஆனால், இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், 2018-2019-ல் 20 ஆயிரத்திற்கும் மேல், தனிநபர் அல்லது குழுமத்தால், பங்களிப்பு இருக்கவில்லை என தெரிவித்துள்ளது.


2018-2019 ஆண்டில், டாடா குழும தேர்தல் அறக்கட்டளைத் தான், அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.


இது பாஜக-விற்கு, ரூ.359 கோடியும், காங்கிரசிற்கு ரூ.55.6 கோடியும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.