இன்றைய ராசி பலன் 15-11-2020

 மேஷம் இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும். 


ரிஷபம் வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அவர்களால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 


மிதுனம் இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும் 


கடகம் நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தை முன்னிட்டு வெளியூர் செல்ல நேரிடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும். 


சிம்மம் வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறுசிறு சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். 


கன்னி சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். 


துலாம் இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். 


விருச்சிகம் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 


தனுசு மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனம் தேவை. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும் 


மகரம் நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும். 


கும்பம் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும். 


மீனம் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் காரிய அனுகூலம் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்...