10-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு

 



 


தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


தமிழகத்தில் 6 ஆம் கட்ட ஊரடங்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.


நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.


அதன்படி ,தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில்  உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவிதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 10.11.2020 முதல் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு.


இந்நிலையில் திரையரங்கு திறப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,



  • திரையரங்குகளில்  50% இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் .

  • ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்.

  • மாஸ்க் அணிந்த படியே அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க  வேண்டும் .

  • கொரோனா குறித்த விளம்பரங்களை திரையிட வேண்டும்.

  • திரையரங்கு உள்ளே  நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது .

  • ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் கிருமி நாசினி  கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.