இராணுவ வீரர்களுக்கு சல்யூட் வைத்த சிறுவன்

  


இராணுவ வீரர்களுக்கு  அவர்களது பாணியில் சல்யூட் வைத்த சிறுவன்.


லடாக்கில் சுஸுல் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த நம்கியால் என்ற சிறுவன் தன்னை கடந்து செல்லும், இந்திய திபெத் எல்லை காவல்படை வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே, அட்டென்ஷனில் நின்று சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளார்.


இதனை அதிகாரி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இந்திய திபெத் எல்லை காவல் படையின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், அதிகாரி இராணுவ முறைப்படி எப்படி சல்யூட் வைப்பது என அந்த சிறுவனுக்கு கற்று கொடுத்துள்ளார்.


இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், இணையவாசிகள் பலரின் நெஞ்சகளை இந்த வீடியோ கொள்ளை கொண்டுள்ளது.